சென்னை, நந்தம்பாக்கம்:
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில், Confederation of Indian Industry (CII) சார்பில் தமிழக அரசு மற்றும் ஆந்திரப் பிரதேச அரசு இணைந்து நடத்தும் 16-வது FOOD PRO ’26 உணவு மற்றும் உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்பக் கண்காட்சி இன்று தொடங்கியது.

மூன்று நாட்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சி வரும் 9-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் உணவுத் துறை சார்ந்த பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோர் பங்கேற்றுள்ளனர்.

கண்காட்சி வளாகத்தில் 300-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் முனைவோர் தங்களது நிறுவனங்களின் தயாரிப்புகள், நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் வணிக வாய்ப்புகளை காட்சிப்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக, உணவு பதப்படுத்துதல், உணவு சேமிப்பு, உணவுப் பொருட்களை கையாளுதல் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பங்கள், இயந்திரங்கள் மற்றும் பல்வேறு உணவுப் பொருட்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

இந்தக் கண்காட்சியை பார்வையிடும் வர்த்தகர்கள், தொழில் முனைவோர் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் தயாரிப்புகள் குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம் கேட்டறிந்து வருகின்றனர். மேலும், தங்களது தொழில் வளர்ச்சிக்கு தேவையான தொழில்நுட்பங்கள் மற்றும் பொருட்களைத் தேர்வு செய்து பெற்றுச் செல்கின்றனர்.

உணவுத் தொழில் துறையில் புதிதாக உருவாகி வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் வணிக வாய்ப்புகளை அறிந்து கொள்ள இந்தக் கண்காட்சி முக்கிய தளமாக அமைந்துள்ளது.

பேட்டி: கார்த்திகா

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *