தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள தேனி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நாகலாபுரம் ஊராட்சியில் VB-GRAM(G) கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத திட்டத்தின் கீழ் நாகலாபுரம் ஊராட்சியின் உட்கடை கிராமமான சிவலிங்க நாயக்கன்பட்டியில் ரூபாய் 8 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக குளம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நா.ரவிச்சந்திரன் (கிராம ஊராட்சி) இரா. சரவணன் வ‌ஊ.ஆகியோர் தலைமை தாங்கி வேத மந்திரங்கள் முழங்கி பூமி தேவியை வணங்கி முதல் செங்கலை எடுத்து வைத்து பூமி பூஜை செய்து குளம் வெட்டும் பணியை தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய பொறியாளர் பிரகதீஸ்வரன் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தனலட்சுமி ஒன்றிய மேற்பார்வையாளர் காவ்யா ஊராட்சி செயலர் எஸ்.பி.சுருளி மற்றும் பலர் கலந்து கொண்டனர்

இது குறித்து இந்த பகுதி விவசாயிகள் கூறும் போது நாகலாபுரம் ஊராட்சி பகுதிகளில் மழை பெய்தால் அந்தத் தண்ணீர் வீணாக சாக்கடைகள் கலந்து வீணாகும் ஊராட்சியில் மழை பெய்தால் அதிகமாக தண்ணீர் வரும் இடத்தில் குளம் அமைப்பதால் இந்த பகுதி விவசாய நிலங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும் என்றனர்.இந்த பூமி பூஜை செய்து குளம் வெட்டும் பணி துவங்கியதையடுத்து தொடர்ந்து புதிய குளம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *