முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீர்வளத்துறை சார்பாக முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்து வைத்த மாவட்ட ஆட்சித் தலைவர்
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளில் முதல் போக சாகுபடிக்கு 14707 ஏக்கர் நிலங்களுக்கு வினாடிக்கு 200 கன அடி வீதமும் தேனி மாவட்டம் மற்றும் மதுரை மாநகராட்சி குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 150 கன அடி வீதமும் என மொத்தம் வினாடிக்கு 350 கன அடி வீதம் சனிக்கிழமை முதல் 120 நாட்களுக்கு அணையின் நீர் இருப்பு மற்றும் அணைக்கு நீர் வரத்தைப் பொறுத்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
திறந்து விட்டப்பட்ட தண்ணீர் மூலம் கம்பம் பள்ளத்தாக்கு ஆயக்கட்டு பகுதிகளில் உள்ள 14707 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் எனவே தேனி மாவட்டத்தை சேர்ந்த விவசாய பெருமக்கள் இந்த நீரை சிக்கனமாக பயன்படுத்தி குறுகிய கால பயிர்களை நடவு செய்து நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற்று பயன் பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் இரா வைத்திநாதன் தெரிவித்தார்
இந்த நிகழ்ச்சியில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் எம்பி சட்டமன்ற உறுப்பினர்கள் கம்பம் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா பெரியகுளம் சபரி ஐங்கரன் ஆண்டிபட்டி ஆ. மகாராஜன் மாவட்ட வருவாய் அலுவலர் ப ராஜகுமார் வருவாய் கோட்டாட்சியர் சையது முகைதீன் இப்ராஹிம் செயற்பொறியாளர்கள் பெரியாறு வைகை வடி நில கோட்டம் ச. சிவ சிவபிரபாகர் சிறப்பு கோட்ட செயற் பொறியாளர் பெரியாறு அணை கம்பம் சி. செல்வம் உதவி செய்ற் பொறியாளர்கள் மல்லிகா ராஜகோபால் உத்தமபாளையம் தாசில்தார் பால சண்முகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.