கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அடுத்த எர்ரஅள்ளி கிராமத்தில், இயற்கை எழில் சூழ்ந்த ஒரு பெரிய மலையின் உச்சியில் ஒற்றைப்பாறையில் வீற்றுள்ள ஸ்ரீகவிசென்றாய ஸ்ரீதேவி பூதேவி சாமிக்கு திருமண வைபோகம் நிகழ்வு நடைபெற்றது

இந்த நிகழ்வில் தேவீரஅள்ளி மற்றும் தளிஅள்ளி கிராமத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகளில் வழியாக ஊர்வலமாக சென்றனர் பின்னர் சிறப்புப் பூஜைகள் மிகச்சிறப்பாக நடைபெற்றன விழாவை முன்னிட்டு, மூலவர் ஸ்ரீகவிசென்றாய ஸ்ரீதேவி பூதேவி சாமிக்கு பால், தயிர், மஞ்சள்
​சந்தனம், பன்னீர்​உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் மகா அபிஷேகம் செய்யப்பட்டது.

திரவியங்களால் நீராடிய ஸ்ரீ கவி சென்றாய சாமிக்கு, மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். அபிஷேகத்தைத் தொடர்ந்து, சுவாமிக்கு வேத மந்திரங்கள் முழங்க ஸ்ரீதேவி பூதேவி திருமண நிகழ்வு நடைபெற்றது இதை மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இந்த விழாவில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்

குறிப்பாக, இந்தச் ஸ்ரீகவிசென்றாய சாமி குலதெய்வமாகக் கொண்டு வழிபடும் 80-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் வெளியூர் பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்குகான ஏற்பாட்டை கோவில் தர்மகர்த்தா மற்றும் கோவில் நிர்வாகிகள் இதற்கான ஏற்பாட்டை செய்திருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *