அலங்காநல்லூர்.
ஆக.09-

மதுரை மாவட்டம்அலங்காநல்லூரில் தமிழக வெற்றி கழகம் சார்பாக மற்றும் பாண்டி நீதி நினைவாக மாபெரும் வடமஞ்சு விரட்டுதிருவிழா நடைபெற்றது சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா கலந்து கொண்டு இந்த போட்டியை தொடங்கி வைத்தார்
தொடர்ந்து வெற்றி பெற்ற காளை உரிமையாளர்களுக்குநினைவு பரிசு மற்றும் ஊக்கத்தொகை பீரோ உள்ளிட்டவைகளை வழங்கினார் முன்னதாக போட்டியில் பங்கேற்ற ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மாலை வேட்டி அணிவித்து வாழ்த்தினார்.
சிறப்பு அழைப்பாளராக குலமங்கலம் வக்கீல் திருப்பதி, கலந்து கொண்டார். இதில் தவெக ஒன்றிய செயலாளர் விஜய்ஹரிஷ்,பேரூர் செயலாளர் தளபதி ரஞ்சித்,முன்னாள் கூட்டுறவு தலைவர் பாலாஜி,மதுரை மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணகண்ணன், மற்றும் வாடிப்பட்டி வக்கீல்தியாகராஜன், தமிழன்தாமு, ஒன்றியஇணைச்செயலாளர் முத்து, பேரூர் நிர்வாகி விக்னேஷ், வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் தனசேகரன், கார்த்திக், மகளிரணிலெட்சுமி,வலையபட்டி கிளைச் செயலாளர்
கிருஷ்ணமூர்த்தி,பாறைப்பட்டிகிளைச் செயலாளர் ராஜேந்திரன்,சோழவந்தான் முன்னாள் பேரூராட்சி தலைவர் கொரியர் கணேசன்,உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு வருகை இந்த சட்டமன்ற உறுப்பினர் கருப்பையாவுக்கு விழாகமிட்டியினர் மேலதாளங்கள் முழங்கவரவேற்பு கொடுத்தனர் பின்னர் கைத்தறி ஆடை மற்றும் ஆளுயர மாலைஅணிவித்து
வீரவாள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.