மன்னார்குடி., ஆக.09

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் செங்கமலத்தாயார் ஆடிப்பூர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதன் 2ம் தின நிகழ்ச்சியாக அன்னவாகனத்தில் சாமி வீதி உலா நடைபெற்றது.

கோவிலில் இருந்து சர்வ அலங்காரத்தில் செங்கமலத்தாயார் அன்ன வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதனைத் தொடர்ந்து கோவிலில் உள்ளே உள்ள தாயார் தேரோடும் பிரகாரத்தில் வீதி உலா நடைபெற்றது . செங்கமலம் யானை முன்னே வர நாதஸ்வர இன்னிசை முழங்க செங்கமலத்தாயார் புறப்பாடு நடத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜை நிகழ்ச்சியில் தாயாருக்கு கும்ப ஆரத்தி காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *