தமிழக வெற்றி கழகத்தின் தேனி மேற்கு மாவட்ட செயலாளாராக கம்பம் எம்எல்.ஏ. நியமனம் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா எம்எல்ஏவாக பொறுப்பு ஏற்க்கப் பட்டதில் இருந்து தொடர்ந்து கம்பம் தொகுதி மக்களுக்கும் மேலும் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று சிறந்த மக்கள் சேவகராக மக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்து பொது மக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறார். இதனைத் தொடர்ந்து அவரின் மக்கள் பணி மென்மேலும் சிறப்பாக செய்ய அவரை ஊக்குவிக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா எம்எல்ஏ அவர்களை தமிழக வெற்றி கழகத்தின் தேனி மேற்கு மாவட்ட செயலாளராக நியமனம் செய்துள்ளார்