பாபநாசம் பகுதியில் 10 ,12 -ஆம் வகுப்பு முதலிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கப் பரிசளிப்பு விழா

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் நகர செங்குந்தர் நலச் சங்கம் சார்பில் 10 ,12-ம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த 27 பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கப் பரிசளிப்பு விழா நகரத் தலைவர் கலைமணி தலைமையில் நடைபெற்றது.

மாநில பொதுக்குழு உறுப்பினர் சீனிவாசன் முன்னிலை வகித்தார் நகர பொருளாளர் சிவகுமார் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார்.

விழாவில் தஞ்சை மாவட்ட தலைவர் சிவா கலந்து கொண்டு 27 பள்ளி மாணவ மாணவிகளுக்கு நற்சான்றிதழ் மற்றும் ரொக்க பரிசு வழங்கி பாராட்டி பேசினார் விழாவில் மூத்தோர் அணி மண்டல செயலாளர் சிவ. இளங்கோவன், மகளிர் அணி அமைப்பாளர் ராணி கலைமணி,இலக்கிய அணி மண்டல செயலாளர் ராஜசேகரன், ஓய்வு பெற்ற கூட்டுறவு சார் பதிவாளர் ராஜேந்திரன், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் பாலகிருஷ்ணன், சிவக்குமார், ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள் .

முடிவில் பாபநாசம் நகர துணைத் தலைவர் மணி நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *