கோவையில் நாராயண் சேவா சன்ஸ்தான் சார்பாக நடைபெற்ற மாபெரும் இலவச செயற்கை மூட்டு வழங்கும் முகாம் நாராயண் சேவா அமைப்பின் இயக்குனர் வந்தனா அகர்வால் துவக்கி வைத்த முகாமில்,தமிழகம்,கேரளா,கர்நாடகா என பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஐநூறுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பு

இராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் செயல்பட்டு வரும் நாராயண் சேவா சன்ஸ்தான் எனும் அமைப்பு இந்தியா மட்டுமின்ற ஆப்ரிக்க நாடுகளிலும். மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை கால் மற்றும் கைகளை இலவசமாக பொருத்தும் முகாம்களை நடத்தி வருகின்றனர்…

இந்நிலையில் தமிழகத்தில் இரண்டாவது முறையாக முப்பரிமாண நவீன செயற்கை காலிபர் வழங்குவதற்கான முகாம் கோவையில் நடைபெற்றது.இதில்,கோவை,ஈரோடு,சேலம்,மதுரை,திருச்சி என பல்வேறு தமிழகத்தின் மாவட்டங்களில் இருந்தும் கர்நாடகா,கேரளா மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக முகாம் துவக்க விழா நாராயண் சேவா சன்ஸ்தான் அமைப்பின் இயக்குனர் வந்தனா அகர்வால் நடைபெற்றது..

இதில் சிறப்பு அழைப்பார்களாக, முன்னால் சிபிஐ இயக்குனர் கார்த்திகேயன் சாந்தாபென் திரிபோவன் பட்டேல் சாரிட்டபிள் டிரஸ்ட் ஹரிஷ் பாய் பட்டேல், ரூட்ஸ் குழுமங்களின் தலைவர் ராமசாமி, மற்றும் சமூக ஆர்வலர்கள் தாமோதர பிரசாத் சோமானி, சந்தோஷ் முந்த்ரா ,மகேஷ் அகர்வால் மோத்திலால் கோயல், வெங்கடேஸ்வரன், கமல் கிஷோர் அகர்வால், ராகேஷ் மேத்தா,முகாம் ஒருங்கிணைப்பாளர் அக்சால் சிங் பாட்டீ உட்பட பலர் கலந்து கொண்டனர்..

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அளவீடு செய்த மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ நிபுணர்கள் குழுவினர் ஆய்வு செய்து,தயார் செய்யப்பட்ட ஜப்பான்,ஜெர்மன் தொழில் நுட்பத்தில் தயார் செய்யப்பட்ட 3 டி வகை காலிபர்களை மாற்றுத்திறனாளிகளுக்கு பொருத்தப்பட்டது…

முகாமில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள் எடை குறைவான நவீன தொழில் நுட்ப காலிபர்கள் பொருத்தி உள்ளதால் நடப்பதற்கும் பிற வேலைகள் செ்வதற்கும் மிக எளிதாக இருப்பதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *