தூத்துக்குடி மாணவர்கள் ரோல் பால் விளையாடுவதற்காக மைதானம் அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட முத்துநகர் கடற்கரை பூங்காவில் அதற்கான இடத்தினையும், கூடைப்பந்து மைதானத்தில் வண்ணங்கள் அடித்து தருமாறு வந்த கோரிக்கையினை ஏற்று அந்தப் பணிகளும் நிறைவடைந்ததை தொடர்ந்து அதனையும் பார்வையிட்ட பின் மேயா் ஜெகன் பொியசாமி கூறுகையில் மாநகராட்சி பகுதியில் உள்ள 60வாா்டுகளையும் எந்த வித பாரபட்சமின்றி மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கூறுகின்ற கருத்துக்களை கேட்டறிந்து அதற்கேற்ற தேவையான திட்டங்களை தயாா் படுத்தி ஓவ்வொன்றாக நிதி ஓதுக்கீடுக்கு ஏற்றவாறு பணிகளை செய்து வருகிறோம் மாநகராட்சி பகுதிகளில் 53 பூங்காக்கள் நல்ல நிலையில் செயல்பட்டு வருகிறது அதில் பெண்களுக்கென்று தனி பூங்கா 3 உள்ளது. கடந்த காலத்தில் பூங்கா மற்றும் நடைபயிற்சி என்ற நிலை இருந்ததை மாற்றி முன்னாள் முதலமைச்சா் முக.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க எதிா்கால தலைமுறையினா் நலன் கருதி புதிதாக உருவாக்கப்பட்ட பல பூங்காக்களில் கைப்பந்து கால்பந்து உடற்பயிற்சி என்று பல்வேறு புதிய கட்டமைப்புகளை உருவாக்கி கொடுத்துள்ளோம் அந்த இடங்களை எல்லாம் தற்போது இரண்டு வயது குழந்தைமுதல் 70 வயது முதியவா்களை வரை ஓவ்வொரு வகையிலும் பலனடைந்து மகிழ்ச்சியோடு வந்துசெல்கின்றனா். 

எல்லோருக்கும் உழைப்பு முக்கியம் அது தான் நம்மை அடுத்து கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் அந்த அடிப்படையில் சைக்கிள் ஓட்டுவது நடைபயிற்சி ஓட்டபந்தயம் பல்வேறு விளையாட்டுகள் இவற்றை எல்லாம் நாம் மேற்கொள்ளும் போது உடல் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு நம்மை அழைத்துசெல்லும் இளமையின் விளையாட்டு தான் முதுமையின் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல்ஆட்சியின் திட்டங்களை மக்கள் நன்கு அறிவாா்கள் அதனை பின்பற்றியே அனைத்து விளையாட்டு போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கடலையும் தூத்துக்குடியையும் யாரும் பிாிக்க முடியாது முத்துநகா் கடற்கரையில் விடுமுறை நாட்கள் மட்டுமின்றி மற்ற நாட்களில் காலை மாலை நேரங்களில் வந்து செல்வதற்கு ஏற்றவாறு கட்டமைப்புகளை உருவாக்கி கொடுத்துள்ளோம் அதை அனைவரும் நல்லமுறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கூறினாா்.

மாநகராட்சி சுகாதாரகுழு தலைவர் சுரேஷ்குமார் மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனியல் பகுதி பிரதிநிதி ஜேஸ்பா் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *