கல்பாக்கம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் யாதும் ஊரே அமைப்பின் சார்பில் பசுமையை வளர்க்கும் விதமாக பல்வேறு முன்னெடுப்புப் பணிகளை மேற்கொண்டு செய்து வருகிறது அதன்படி திருக்கழுக்குன்றம் ஒன்றியம் வெங்கப்பாக்கம் ஊராட்சி ஆரம்பாக்கம் கிராமம் ஏரிக்கரையில் 5 ஆயிரம் பனை விதை நடும் விழா இன்று 26 ஆம் தேதி யாதும் ஊரே அமைப்பின் தலைவர் ரமணன் தலைமையில் நடைபெற்றது
அமைப்பின் பொறுப்பாளர் அரிகிருஷ்ணன் அரிமா சங்க பொறுப்பாளர் கூவத்தூர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வெங்கப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வேண்டாமிர்தம் ஏழுமலை கலந்து கொண்டு 5 ஆயிரம் பனை விதைகளை ஏரிக்கரை ஓரத்தில் நடவு செய்யும் பணியை துவக்கி வைத்தார்