கல்வித் துறைக்கு ஆசிரியர்கள் ஆற்றி வரும் அரும் பணியைப் பாராட்டும் வகையில்,கோவைபுதூர் வி.எல்.பி. ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்,ஆச்சார்யா விருது வழங்கும் விழா நடைபெற்றது…
கல்லூரியின் செயலாளர் முனைவர் ஜெயஸ்ரீ சூர்யகுமார் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் முனைவர் குமார் தலைமை வகித்தார் இந்த விழாவில் கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து 181 அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 400 ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
ஆசிரியர் உதயா, ஆசிரியர் வீரா, ஆசிரியர் ரத்னா உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் தலைமை ஆசிரியர்கள்,ஆசிரியர்கள்,மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கோவை மாநகராட்சி இணை ஆணையர் குமரேசன், பாரதியார் பல்கலைக்கழகத்தின் கல்லூரி அபிவிருத்தி மன்றத் தலைவர் முனைவர் கே. சீனிவாசன், வெளியில் மலபார் சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைமைப் பொறியாளர் கண்ணையன் ஆகியோர் கலந்து கொண்டு ஆசிரியர்களை வாழ்த்தினர்.
நிகழ்ச்சியில் பேசிய முக்கிய விருந்தினர்கள் கல்வி மற்றும் சமூகத்தின் வளர்ச்சிக்கு ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது எனவும்,மாணவர்களை நல்லொழுக்கமுள்ள, சிந்திக்கும் திறன் கொண்டவர்களாக உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு அதிகம் இருப்பதாக தெரிவித்தனர்..