தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

குண்டடம்

மருதூர் கிராமத்தில் நடைபெற்ற 10பஞ்சாயத்துக்களை சேர்ந்த பாசன நீர் கோரும் விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்றபின்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மருதூர் ஊராட்சி, செங்காட்டுப்பாளையம் தேனாச்சியம்மன் கோயில் மண்டபத்தில் தாராபுரம், குண்டடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மருதூர், மோளரபட்டி, பொன்னாபுரம், முண்டுவேலம்பட்டி, நவநாரி, கோவிந்தாபுரம், கெத்தல்ரேவ் உள்ளிட்ட 10பஞ்சாயத்துக்களை சேர்ந்த பாசன நீர் கோரும் விவசாயிகள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், அருண்ராஜ், புஸ்சி ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முன்னதாக விவசாயிகள் தரப்பில் அமைச்சர்களிடம் அளிக்கப்பட்ட மனுவில், மேற்கண்ட 10பஞ்சாயத்துக்களுக்கு உட்பட்ட 32கிராமங்களைச் சேர்ந்த சுமார் 5ஆயிரம் விவசாய குடுமபங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தண்ணீர் இல்லாமல் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறோம்.


விவசாயம் செய்ய மழையை மட்டும் நம்பியிருக்கும் எங்களுக்கு மழையும் கைகொடுக்காமல் போனதால் போர்வெல்கள் வற்றிப்போய்விட்டது. இதன் காரணமாக கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறோம். எனவே எங்களின் பகுதிக்கு அருகில பாயும் அமராவதி, பிஏபி பாசன திட்டங்களை எங்கள் பூமிக்கு விரிவுபடுத்தி தண்ணீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என கூறியிருந்தனர்.


விவசாயிகளின் கோரிக்கைக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன்
2 முனை மின்சாரம் எனக்கூறி 3 முனை மின்சாரம் பயன்படுத்தி வருகிறோம் இதனை வெளியில் சொல்லக்கூடாது


தவறு செய்தால் அமைச்சர் பதவியில் யாரும் இருக்க மாட்டார்கள்
சத்தியபாமாவை மாபெரும் வெற்றி பெறச்செய்தால் நம் கரம் வழுவடையும் நான் எதற்காக சொல்கிறேன் என்று சென்னால் எங்களை கோட்டையில் ஆதரிக்கிறேன் என்று சொல்கிறார்கள் தற்பொழுது தேர்தல் களத்தில் போட்டியிடுகிறார்கள் இது தான் சிக்கல் இந்த சிக்கல் தீர வேண்டும் என்றால் இதுபோல இடைத்தேர்தல்களில் வெற்றிபெற்று நம் கரத்தை வலுப்படுத்துவதன் மூலம் தூய்மையான ஆட்சி மலறும் என்று பேசினார்


அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் புஷ்ஷி ஆனந்த் பேசுகையில்,
கூட்டம் நடைபெறும் இடங்களில் கீழ்தரமாக யாரோ ஒருவர் மூலமாகவும் ,சிறுகுழந்தைகளை வைத்தும் மின்சார வயர்களை இழுத்து பிடுங்கி மின் துண்டிப்பை ஏற்படுத்துவதே எதிர்க்கட்சியினர் வாடிக்கையாக வைத்துள்ளனர்,எத்தகைய செயல்களை செய்தாலும் நாங்கள் மக்களுக்கு செய்ய வேண்டிய சேவைகளை தொடர்ந்து செய்யும் ஆட்சியாக தான் தமிழக முதல்வர் தலைமையிலான ஆட்சி இருக்கும் என பேசினார்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர் சந்திப்பில்

மக்கள் வெளிப்படையான ஆட்சி நடைபெறுவதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள், ஆதலால் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்தியபாமா ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்,செல்லும் இடங்களில் எதிர்ப்பு இருப்பது போல் ஒரு பிம்பத்தை உருவாக்க அதிமுக சேர்ந்த சிலர் முயல்கின்றனர்,
ஆனால் பொதுமக்கள் தங்களுக்கு மிகுந்த வரவேற்பு அளிக்கின்றனர்,
நான் ஒரு இடத்திற்கு சென்ற போது அங்கு மக்கள் அன்போடும் ஆதரவோடு வரவேற்றனர்,அதிமுக திமுகவினர்கள் மாறி மாறி விசிலுக்கு ஓட்டு போடாது என கூறுகின்றனர்,கடந்த தேர்தலில் எவ்வாறு இருவரும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முயற்சி செய்தார்களோ அதே போல் தான் தற்போதும் முயல்கின்றனர் ,இது கடந்த மே மாதம் நடைபெற்ற பொது தேர்தலையும் இதையேதான் செய்தனர்,மறைமுக கூட்டணி இருவருக்கும் இருந்தது உண்மைதான் என்பது வெட்ட ஆகி உள்ளது.

இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் எம்பி மகேந்திரன், தவெக குண்டடம் மேற்கு ஒன்றிய செயலாளர் சம்பத்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *