மதுராந்தகம்:
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே அசோக் லேலண்ட் கனரக வாகனங்களுக்கான புதிய அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையம் திறப்பு விழா நடைபெற்றது.

மதுராந்தகம்–மேல்மருவத்தூர் இடையே ஜி.எஸ்.டி. சாலையில் சிலாவட்டம் பகுதியில், டி.கே.எம். ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தின் சார்பில் அசோக் லேலண்ட் கனரக வாகனங்களுக்கான புதிய அங்கீகரிக்கப்பட்ட 24 மணி நேர சர்வீஸ் மையம் தொடங்கப்பட்டுள்ளது.

புதிய சர்வீஸ் மையத்தை அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தெற்கு மண்டலம்–1 சேவை மேலாளர் சங்கர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் டி.கே.எம். ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரெஜி லூக்கோஸ், இயக்குநர் ரம்யா மேரி ஜான் மற்றும் செயல் இயக்குநர் ரமேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதுகுறித்து நிறுவன நிர்வாகிகள் கூறுகையில், மதுராந்தகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த கனரக வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் தங்களது வாகனங்களை சிறந்த முறையில் பராமரிக்கவும், பழுதுபார்க்கவும் இந்த புதிய சர்வீஸ் மையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றனர்.

மேலும், இம்மையத்தில் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் 100 சதவீத அசல் உதிரி பாகங்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டு விரைவான, நம்பகமான மற்றும் தரமான சேவை வழங்கப்படும் என தெரிவித்தனர்.

திறப்பு விழாவில் அசோக் லேலண்ட் வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *