அலங்காநல்லூர், ஆக.10:
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள கல்லணை தனியார் திருமண மண்டபத்தில், மதுரை புறநகர் இந்து முன்னணி சார்பில் அகண்ட பாரதம் சபதமேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் ஜி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் பழனிவேல் ஜெகன் ஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய தலைவர்கள் ராஜசேகர், பூங்கொடி, ஒன்றிய பொருளாளர் ரவிச்சந்திரன், துணைத் தலைவர் சேகர், ஒன்றிய செயலாளர் சக்திவேல், செயற்குழு உறுப்பினர் மாரிமுத்து உள்ளிட்ட ஒன்றிய மற்றும் நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *