எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

சீர்காழி ஸ்ரீ சட்டை நாதர் சுவாமி கோயிலில் ஆடி மாத பிரதோஷம் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட ஸ்ரீ சட்டைநாதர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி,முத்து சட்டைநாதர், தோனியப்பர் அருள் பாலிக்கிறார். இந்நிலையில் ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு கொடி மரத்தில் அருள் பாலிக்கும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

திரவிய பொடி, மஞ்சள் ,தயிர், பழச்சாறு ,தேன், பஞ்சாமிர்தம் ,பால், இளநீர் ,சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் செய்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் நந்தி பகவானை வழிபாடு செய்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *