நாகப்பட்டினம்,ஆக.11-
நாகை மாவட்டம் திட்டச்சேரி பேருந்து நிலையத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகு சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திட்டச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலெட்சுமி தலைமை தாங்கி நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்.
இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகு சமூக பணிமையாளர் பிரவீன் குழந்தை பாதுகாப்பு குறித்து பேசினார்.
இதில் கலை குழுவினர் கலந்து கொண்டு பெண் குழந்தைகளுக்கு உயர்கல்வி வழங்குவதன் அவசியம், போக்சோ சட்டம் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டங்கள் பற்றி விழிப்புணர்வு, குழந்தை திருமணம், பாலின பாகுபாடு மற்றும் பெண் சிசுக்கொலை போன்ற சமூகத் தீமைகளைத் தடுத்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் திட்டச்சேரி போலீசார், பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.