தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தாலுகா அகமலை மலை கிராமத்தில் புதன்கிழமை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மூலம் மக்கள் தொடர்பு திட்டம் முகாம் மாவட்ட ஆட்சி தலைவர் இரா. வைத்திநாதன் தலைமை வகித்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
மேலும் இந்த முகாமில் 89 பயனாளிகளுக்கு ரூபாய் 48.91. இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். முன்னதாக மாவட்ட ஆட்சித் தலைவர் பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழக அரசின் திட்டங்கள் குறித்த விளக்க கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார் இதனைத் தொடர்ந்து அகமலை ஊராட்சியில் ரூபாய் 30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் கட்டுமான பணிகளையும் ரூபாய் 40 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலைய கட்டிடத்தனை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
பின்னர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறன் குறித்து ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள மாணவர்களுடன் கலந்துரையாடினார் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ப. ராஜகுமார் இணை இயக்குனர்கள் மரு கலைச்செல்வி மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் மரு கிரிஜா கால்நடை பராமரிப்பு துறை இணைப்பதிவாளர் கூட்டுறவுத்துறை நர்மதா துணை இயக்குனர் தோட்டக்கலை நிர்மலா தனித்துணை ஆட்சியர் கவிதா வருவாய் கோட்டாட்சியர் சையது முகைதீன் இப்ராஹிம் மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் கதிர்வேல் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நல அலுவலர் சுரேஷ் உதவி இயக்குனர் நில அளவை அப்பாஸ் முன்னோடி வங்கி மேலாளர் நேதாஜி செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் பாண்டி போடிநாயக்கனூர் தாசில்தார் சுருளி போடிநாயக்கனூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மக்கத்தம்மாள் ஜெகதீஸ் சந்திரபோஸ் ஊராட்சி செயலாளர் கருப்பையா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்