கும்பகோணம் மாஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்சி கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் முனைவர் க. சரவணன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக திருவிடைமருதூர் துணை காவல் கண்காணிப்பாளர் க. அழகேசன் கலந்துகொண்டு பேசுகையில்
போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் உடல், மன மற்றும் சமூக பாதிப்புகள் குறித்து அவர் விளக்கினார். மாணவர்கள் போதை பழக்கத்திலிருந்து விலகி ஆரோக்கியமான வாழ்க்கையை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சேர்மேன் வி.ஏ. ரோசாரியோ, கல்விப்புல தலைவர் முனைவர் ஜி. ரமேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக 1,100 மாணவ, மாணவிகள் “போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம்” என உறுதிமொழி ஏற்றனர். அனைத்து துறை தலைவர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்