வடலூர், ஆக. 13-
கோவையில் சத்குரு, வால் நிறுவப்பட்ட ஈஷா யோக மையம் சார்பில், “ஈஷா கிராமோத்சவம் 2026” என்ற பெயரில், கிராமப்புற வீரர்களுக்கான ரூரல் பிரீமியர் லீக் – ஈஷா டிராபி கைப்பந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா முழுவதும் தமிழ்நாடு உள்ளிட்ட
மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இப்போட்டிகள் நடைபெற்றன.
இதன் ஒரு பகுதியாக, கிளஸ்டர் அளவிலான முதற்கட்ட கைப்பந்து போட்டிகள், கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள சத்யஞான சபை அருகிலுள்ள பார்வதிபுரம் அரசு பள்ளி மைதானத்தில், இரண்டு நாள் நடைபெற்றன.
இப்போட்டியில் வடலூர், குறிஞ்சிப்பாடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 63 கைப்பந்து அணிகள் ஆர்வத்துடன் பங்கேற்றன.
போட்டிகளை வார்டு கவுன்சிலர் தமிழ்செல்வன்
தொடங்கி வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற பரபரப்பான போட்டிகளின் முடிவில், வெற்றி பெற்ற முதல் நான்கு அணிகளுக்கு வடலூர் டி ஆர் எம்சாந்தி ஃபர்னிச்சர்ஸ் உரிமையாளர்,டி ராஜமாரியப்பன் பரிசுகளை வழங்கினார்.
இதில், கருங்குழி அணி முதல் பரிசையும், குறிஞ்சிப்பாடி கேபிடி கிங்ஸ் அணி இரண்டாம் பரிசையும், மருவாய் விமல் ஃபிரண்ட்ஸ் அணி மூன்றாம் பரிசையும், கள்ளுக்கடைமேடு கே கே எம் பாய்ஸ் அணி நான்காம் பரிசையும் வென்றன.
வெற்றி பெற்ற அணிகளுக்கு முறையே ரூ.10, ஆயிரம், ரூ.7, ஆயிரம், ரூ.5, ஆயிரம் மற்றும் ரூ.3, ஆயிரம் ரொக்கப் பரிசாக காசோலை மற்றும் டிராபி வழங்கப்பட்டது.
இதில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற கருங்குழி அணி மற்றும் குறிஞ்சிப்பாடி கேபிடிகிங்ஸ் அணி, அடுத்த கட்டமான (டிவிஷனல்) கோட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளன. இந்தப்போட்டிகள் ஆகஸ்ட் 23ஆம் தேதி கடலூரில் நடைபெற உள்ளன.
இதனைத் தொடர்ந்து, இறுதிக்கட்டப்போட்டிகள் ஈஷா யோக மையம், ஆதியோகி திருமேனி முன்பு, செப்டம்பர் 3 முதல் 6ஆம் தேதிவரை நடைபெற உள்ளன. இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ரூ.5 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.
கிராமப்புற இளைஞர்களின் விளையாட்டுத் திறனை வெளிக்கொண்டு வரவும், அவர்களிடையே விளையாட்டு ஆர்வத்தையும் ஒற்றுமையையும் வளர்க்கவும், ஈஷா கிராமோத்சவம் 2026 போட்டிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளன.