எஸ் செல்வகுமார் செய்தியாளர்
சீர்காழி
சீர்காழி அருகே சவுடு மணல் குவாரியை தடுத்து நிறுத்த கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருமுல்லைவாசல் ஊராட்சிக்குட்பட்ட வழுதலைகுடி கிராமத்தின் குடியிருப்பு பகுதிக்கு அருகாமையில் சவுடு மணல் குவாரி அமைத்து மண் எடுத்து வருவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாக கூறி திருமுல்லைவாசல்,வழுதலைக்குடி,ராதா நல்லூர்,வெள்ளக்குளம் பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் சீர்காழி திருமுல்லைவாசல் பிரதான சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து இந்த பகுதியில் சவுண்டு மண் குவாரி அமைத்து வருவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து நீரின் தன்மையும் மாறி மஞ்சள் நிறத்தில் வருவதாகவும் நீர் உப்பு தன்மையாக மாறி உள்ளது மேலும் அரசு அனுமதித்த அளவைவிட அதிக ஆழத்தில் சவுடு மண் எடுப்பதால் உயிர் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறி தங்கள் பகுதியில் அமைத்துள்ள சவுண்டுமன் குவாரிக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்யக்கோரி கிராம மக்கள் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
தகவல் அறிந்து வந்த சீர்காழி காவல்துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர் மற்றும் சீர்காழி வட்டாட்சியர் பொதுமக்களிடையே பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர் மணல் குவாரி அனுமதி ரத்து செய்தால் மட்டுமே சாலை மறியல் போராட்டத்தை கைவிடதாக கூறி தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் கிராம மக்கள் ஈடுபட்டு வருவதால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
.