கடலூர், மாவட்டம்
வடலூர்,கருங்குழியில் வாழ்ந்து மேட்டுக்குப்பத்தில் சித்தி பெற்ற அருட்பிரகாச வள்ளலார் இறைவன் ஒளி வடிவானவர், உயிர் கொலை செய்யக்கூடாது, பசிப்பிணியை போக்க வேண்டும் என்பன உள்ளிட்ட மனிதநேய கொள்கைகளை கடைபிடிக்க வேண்டும் என கூறினார்.
வடலூர் ஞானபூமியில் இறைவன் ஒளி வடிவானவர் என்பதை காட்ட ஞான சபையிலே பசிப்பிணி போக்க சத்திய தருமச்சாலையையும்,
உருவாக்கினார்,
இத்தகைய சிறப்பு உள்ள வடலூரில் மதுக்கடை, மாமிசக் கடைகளை அகற்றி, தமிழ்நாடு அரசு வடலூரையும்,வள்ளலார் அவதரித்த மருதூர், தண்ணீரால் விளக்கு எரித்த கருங்குழி, வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளை அடக்கி புனித நகரமாக அறிவிக்கக் கோரி அகில உலக சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க அன்பர்கள் சார்பில் வடலூர் சத்திய ஞானசபையில் இருந்து சென்னை கோட்டை தலைமை செயலகத்தை நோக்கி 10 நாட்கள் சுத்த சன்மார்க்க விழிப்புணர்வு பிரசார எழுச்சி நடைப்பயணம் 12ம் தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்கியது திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த விழிப்புணர்வு நடைப்பயணம் வடலூர் ஞான சபையில் இருந்து வடலூர் நான்கு முறை ரோடு நடை பயணம் வந்தது அங்கு சற்று நேரம்பிரச்சாரம் நடைபெற்றது இதன் பின்போலீஸ் சமாதான கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுப்படி சென்னைக்கு வேன் மூலம் செல்ல வேண்டும்,போலீசார் அறிவுறுத்தினார்கள்,
இதற்கு ஒரு சில சன்மார்க்அன்பர்கள் வடலூர், சென்னை சாலையில்
குறிப்பிட்ட தூரம் வரை நடந்து சென்று,வேன் மூலம் பயணத்தை தொடருவோம், என கூறியதால் காவல்துறைக்கும் சம்மர் கசங்கத்தில் இருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து இரு தரப்பிலும் உள்ளவர்கள் அவர்களை சமாதானம் செய்த பின்னர்,பஸ் நிலையத்தில் இருந்து வேன் மூலம் சென்னை நோக்கி பயணத்தை தொடங்கினார்கள்,நிகழ்ச்சி ஏற்பாடுகளை அகில உலக சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க நிர்வாகிகள்,தலைவர்
ஜெய அண்ணாமலை, செயலாளர் சாது மகாதேவன், பொருளாளர் பார்த்திபன், மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தார்கள்.