தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே: கைலாசநாதர் கோவில் மலையடிவாரத்தில் உள்ள ஸ்ரீ ஜிஜி லால் சித்தா பாபாஜி அவர்களின் ஆசிகளுடன், அருள்மிகு ஸ்ரீ அதர்வாண காளி ஸ்ரீ மகா ரத்யங்கார் தேவி சக்தி மகா யாகப் பெருவிழா கடந்த 11 ஆண்டுகளாக உலக நன்மை வேண்டி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டிற்கான ஆடி அமாவாசை பெருவிழா கடந்த 27ஆம் தேதி புதன்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி, நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களைக் குறிக்கும் வகையில் ஐந்து யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, தொடர்ந்து மூன்று நாட்கள் சிறப்புமிக்க சக்தி மகா யாகம் நடைபெற்றது.

இந்த ஆன்மிக நிகழ்வில் ஸ்ரீ ஜிஜி லால் சித்தா பாபாஜி அவர்களின் அன்புச் சீடர்கள், ஆன்மிக நண்பர்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு குரு அருளையும், திருவருளையும் பெற்றுச் சென்றனர்.

விழாவின் தலைமைப் பொறுப்பை ஸ்ரீ ஜிஜி லால் சித்தா பாபாஜி ஏற்றிருந்தார். முன்னிலை வகித்தவர்களாக அகில பாரத துறவிகள் சங்கம் மற்றும் நிலையூர் ஆதீனத்தைச் சேர்ந்த ஸ்ரீ ரமணந்தா ஜி சுவாமிகள், ஸ்ரீ ல ஸ்ரீ சுப்பிரமணியானந்த குரு மகா சன்னிதானம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினர்களாக சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் விக்டோரியா கௌரி, டாக்டர் ஜெயராஜ்செல்வி, ஜெ. தினேஷ் (SBM கல்வி நிறுவனம், திண்டுக்கல்), சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ஈசிஆர் சரவணன் MLA உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும், சிறப்பு அழைப்பாளர்களாக ஓய்வுபெற்ற காவல்துறை கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் IPS, டாக்டர் ஜே. அமலாதேவி, எம்.டி., அன்னை பேரின்பம் மருத்துவமனை, திண்டுக்கல், ராதிகா ரவி, இந்தியா கேம்ஸ் ஹயரிங் ஹெட் & பிரிமியம் இன்ஜினியரிங் மற்றும் WILP., விபு குமார், வீடியோகான் பைபாஸ், தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரவை தேனி மாவட்ட இணைச் செயலாளர், கே. சிவக்குமார், கைலாசநாதர் கோவில் நற்பணி செய்யும் பராமரிப்புக் குழு செயலாளர், தென்கரை பேரூராட்சி தலைவர் நாகராஜன், மாவட்ட அரசு வழக்கறிஞர் குணசேகரன், உத்தமபாளையம் ராம்ஜி, இந்து எழுச்சி முன்னணி தலைவர், ராஜபாண்டி ஜி., தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் மற்றும் சென்னை தொழிலதிபர் ஜெயராமன், Founder, MixEstar Engineering Pvt. Ltd. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவின் சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பாளர் சரவணன் சிறப்பாக ஒருங்கிணைத்தார். விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சிறப்பான முறையில் உணவு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த ஆன்மிகப் பெருவிழாவில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று, யாக வழிபாடுகளில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். உலக நன்மை, மக்கள் நலன் மற்றும் ஆன்மிக வளம் வேண்டி நடைபெற்ற இந்த சக்தி மகா யாகப் பெருவிழா பக்தர்களிடையே மிகுந்த ஆன்மிக எழுச்சியை ஏற்படுத்தியது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *