தஞ்சாவூர், SETC பணிமனை முன்பு ஒன்றிய அரசின், வந்தே மாதரம் கட்டாய பாடல் சட்டத்தை எதிர்த்து, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் மாவட்ட தலைவர் தோழர் அப்துல் நசீர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சை தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் தோழர் பி.செந்தில்குமார் கண்டன உரையாற்றினார். மாட்டச் செயலாளர் தோழர் என்.குருசாமி உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.