அரியலூர் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட கிளையின் சார்பில் தா.பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் நுகர்வு தடுப்பு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் மாவட்ட செயலாளர் ஆ.சண்முகம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் மாநில பொருளாளரும் மாவட்ட தலைவருமான ஜெ ஜெயராமன் தலைமை தாங்கினார் பொறுப்பு தலைமை ஆசிரியர் அசோகன் முன்னிலை வகித்தார் கருத்தாளர்களாக மாவட்ட துணைத் தலைவர் அரிமா எஸ்எம் சந்திரசேகர் அவர்கள் முன்னாள் மாவட்ட தலைவர் ஆசிரியர் அரியலூர் நல்லப்பன் நியமன துணைத் தலைவர் செல்வராஜ் நிர்வாக குழு உறுப்பினர் சத்தியமூர்த்தி ஆயுள் உறுப்பினர் சடையப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு போதைப்பொருள் நுகர்வு தடுப்பு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு கருத்துக்களை வழங்கினார்கள்

400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் அனைவரும் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற நிலையை அடைய போதை பழக்கத்திற்கு எதிரான உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர் விழாவில் நிர்வாக குழு உறுப்பினர்கள் கருப்பையன் பத்மாவதி முன்னாள் நிர்வாக குழு உறுப்பினர் திரவியராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் பள்ளியின் ஜூனியர் ரெட் கிராஸ் கவுன்சிலர் இரா மலர்விழி அனைவருக்கும் நன்றி கூறினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *