ஆடி அமாவாசையை முன்னிட்டு தில்லை காளிக்கு சிறப்பு ஊஞ்சல் உற்சவம் திரளான பக்தர்கள் பங்கேற்பு கடலூர் மாவட்டம், வடலூர் அருகே உள்ள மேட்டுக்குப்பத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பிரம்மமுகி தில்லை காளி அம்மன் திருக்கோவிலில், ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
விழாவையொட்டி, முன்னதாக சிறப்பு மிளகாய் யாகம் நடைபெற்றது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, காளி நடனம் நடைபெற்றது. தொடர்ந்து பெண்கள் அனைவரும் கும்மி அடித்து அம்மனுக்கு தாலாட்டு பாடலுடன் வழிபாடு மேற்கொண்டனர் பின்னர், சுமார் 72 அடி உயரம் கொண்ட ஸ்ரீ தில்லை காளி அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இந்த விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.