கோவையில் ஆன்மீக சொற்பொழிவு மற்றும் தியானம் -பரமஹம்ச யோகானந்தரால் தொடங்கப்பட்ட அமைப்பு ஏற்பாடு
ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரால் 1917-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ‘யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா’ சார்பில், கோவையில் ஆன்மீக சொற்பொழிவு மற்றும் தியான நிகழ்ச்சி துவங்கியது.
கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ சாய் விவாஹா மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், . மகிழ்ச்சியான மற்றும் வளமான வாழ்விற்கான திறவுகோல்’ என்ற தலைப்பிலான இந்த ஆன்மீக நிகழ்ச்சியில், யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியாவின் மூத்த சன்னியாசி சுவாமி ஸ்மரணானந்த கிரி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கீர்த்தனை, தியானம், சுவாசப் பயிற்சி மற்றும் சத்சங்கம் ஆகியவை நடைபெற உள்ளன. இதில் கலந்துகொள்ள அனுமதி முற்றிலும் இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வின் ஒரு முக்கிய பகுதியாக, உலகப் புகழ்பெற்ற ‘ஒரு யோகியின் சுயசரிதம்’ என்ற நூலின் பதிப்பு வெளியிடப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாள் தியான பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. இதில் சத்சங்கம், தியானம், ஒய் எஸ் எஸ் தியான உத்திகள் மற்றும் “எப்படி வாழ வேண்டும்” என்பதற்கான வாழ்க்கை முறை போதனைகள் கற்றுத்தரப்படும். இதற்கு முன்பதிவு செய்வது அவசியம் ஆகும்.
இந்த நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை கோவை, திருச்சி ரோடு பெர்க்ஸ் பள்ளி வளாகம் அருகில் உள்ள ‘யோகதா சத்சங்க தியான கேந்திரா’ செய்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு 9080675994, 7200166176 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
கூடுதல் தொடர்புக்கு 96639 49127, 70923 66166என்ற எண்ணையோ அல்லது linktr.ee/Kriya_Yoga என்ற இணைய இணைப்பையோ பயன்படுத்தலாம்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சுவாமி, தியானப் பயிற்சியின் மூலம் மனதை ஒருமுகப்படுத்துவதுடன், அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை அமைதியான மனநிலையுடன் எதிர்கொள்ள முடியும் என தெரிவித்தார்….
மேலும் மன அமைதி, தெளிவான சிந்தனை, மகிழ்ச்சியான வாழ்க்கை உள்ளிட்டவற்றை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து யோகா குரு வெளியிட்டுள்ள புத்தகத்தை சுட்டி காட்டி பேசினார்..
தியானப் பயிற்சியின் மூலம் மனதை ஒருமுகப்படுத்துவதுடன், அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை அமைதியான மனநிலையுடன் எதிர்கொள்ள முடியும் என எடுத்துரைத்தார்.
மேலும், கிரியா யோகத்தின் அடிப்படைகள், தியானத்தின் பயன்கள் மற்றும் ஆன்மிகப் பயிற்சியை அன்றாட வாழ்க்கையுடன் இணைத்துக் கொள்வதில் ஆண்கள்,பெண்கள்,இளம் தலைமுறையினர் என பேதமில்லாமல் அனைவரும் தியானத்தை பின்பற்றினால் மன அமைதி கிடைக்கும் என அவர் கூறினார்..
யோகா மற்றும் தியானத்தில் ஆர்வம் கொண்ட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டு பயனடைய இந்த நிகழ.ச்சி நடத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்..