தஞ்சை மாவட்டம்
பேராவூரணி புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணியை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் அறிவழகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி முக்கியச் சாலை வழியாக சென்று அரசு மருத்துவமனை வளாகத்தில் நிறைவடைந்தது.

பேரணியில் சாலை பாதுகாப்பு விதிகளை கடைப்பிடித்தல், தலைக்கவசம் அணிதல், வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துவதை தவிர்த்தல், போக்குவரத்து விதிகளை மதித்தல் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதாகைகள் மற்றும் முழக்கங்கள் இடம்பெற்றன.

நிகழ்ச்சியில் உதவி மருத்துவ அலுவலர் டாக்டர் சிந்தியா, செவிலியர்கள் சித்ரா, சீலாராணி, சசிகலா, ஒருங்கிணைப்பாளர் எஸ்தர் ராணி, மருந்தாளுநர் காளிமுத்து, ஆசிரியர் சோழபாண்டியன் உள்ளிட்ட மருத்துவமனை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களும் பேரணியில் பங்கேற்று சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். ஆசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

சாலை பாதுகாப்பு விதிகளை அனைவரும் முறையாக கடைப்பிடித்து விபத்துகளைத் தவிர்த்து உயிர்களை பாதுகாக்க வேண்டும் என்பதே இப்பேரணியின் முக்கிய நோக்கமாக அமைந்தது.

பேராவூரணி செய்தியாளர் நீலகண்டன்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *