மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் செயின்ட் மேரிஸ் திறன் மேம்பாட்டு நிறுவனம் திறப்பு விழா நடைபெற்றது.நிறுவனத்தின் தாளாளர் ஸ்ரீபத்மா,தலைமை தாங்கினார்.சேர்மன் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார்
சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருப்பையாசிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஜெயின் மேரிஸ் திறன் மேம்பாட்டு நிறுவனத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கேற்றி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து அவருக்கு நிறுவன தாளாளர் மற்றும் சேர்மன் கைத்தறி ஆடை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர் தொடர்ந்து சிறப்புரை ஆற்றினார்.நிறுவனத்தின் தாளாளர் திருமதி பத்மா கூறுகையில் மனோன்மணி சுந்தரனார் பல்கலைக்கழகம் மற்றும் நர்சிங் சம்பந்தமான பயிற்சிகள் அழகப்பா பல்கலைக்கழகத்தின்பிஎஸ்சி ஹோட்டல் மேனேஜ்மென்ட் மதுரை விளாங்குடியில் செயல்பட்டு வருகிறது தற்போது நேற்று அலங்காநல்லூர் பஸ் நிலையம் எதிர்புறத்தில் புதிதாக எங்களது இலவச டெய்லரிங் பயிற்சி நிறுவனம் மகிழ்ச்சியுடன் திறக்கப்பட்டுள்ளதுஇந்த பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு மத்திய மாநில அரசு சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.இந்த நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி முன்னாள்உதவி ஆணையாளர் தேவதாஸ், தமிழக வெற்றிக் கழக ஒன்றிய செயலாளர்கள் விஜய்ஹரிஷ், சரவணன்,
தமிழன்தாமு,பேரூர் செயலாளர் தளபதி ரஞ்சித், நிர்வாகி பங்களாமூர்த்தி, மகளிரணி நிர்வாகிகள் லெட்சுமி, லதா,கிளை நிர்வாகிகள் பரத்,கண்ணன், ராஜா, வீரணன், கிருஷ்ணமூர்த்தி,
ராஜேந்திரன்,மோகன்,பேரூர் நிர்வாகிகள் விக்னேஷ்,தங்கராஜ்,உள்பட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் சுரேஷ், நன்றி கூறினார்.