தேனி தென்மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழக மாவட்டச் செயலாளராக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ஜோசப் விஜய் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ள கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா, தமிழக அமைச்சர் வன்னி அரசுவை சந்தித்து புத்தகம் வழங்கி வாழ்த்து பெற்றார்.
அப்போது அமைச்சர் வன்னி அரசு கூறியதாவது:
பல்வேறு சமூக சேவைகளிலும், பொதுமக்களுக்கான பல்வேறு நற்பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு, கம்பம் சட்டமன்றத் தொகுதி மக்களிடமும், தேனி மாவட்ட மக்களிடமும் நன்மதிப்பைப் பெற்ற மனிதநேயர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா.
தேனி தென்மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழக மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அவரது பணி சிறக்கவும், மக்கள் நலனுக்காக தொடர்ந்து சிறப்பாக செயல்படவும் மனதார வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அமைச்சர் வன்னி அரசு தெரிவித்தார்.
மாவட்டச் செயலாளர் பொறுப்பை ஏற்றுள்ள பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ராவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.