பொள்ளாச்சி- ஆக-14

அருள்தந்தை வேதாந்திரி மகரிஷி அவர்களின் 116 வது ஜெயந்தி விழா, உலக அமைதி தின விழா
பத்மபூஷண் விருதாளர் Dr.SKM மயிலானந்தன் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள் 1958ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி உலக சமுதாய சேவா சங்கம் என்ற அமைப்பை தோற்றுவித்தார்கள். இச்சங்கத்தின் முக்கிய நோக்கம் தனிமனித அமைதி, குடும்ப அமைதி, உலக அமைதி என்பதாகும்.
அருள்தந்தை அவர்களின் மகா சமாதிக்குப் பிறகு, தம்மை முழுமையாக உலக சமுதாய சேவா சங்கத்தின் பணிகளுக்கு அர்ப்பணித்து. மிகச் சிறப்பாக வழிநடத்தி வரும் நமது தலைவர் அருள்நிதி. Dr. SKM. மயிலானந்தன் அவர்களுக்கு, இவ்வாண்டு அவர்களின் சிறப்பான சமூக சேவையைப் பாராட்டி மத்திய அரசு பத்மபூஷண் விருதை வழங்கி கௌரவித்துள்ளது.


ஆழியார் அறிவுத் திருக்கோயில் அறங்காவலர்கள் சார்பாக,இன்று அருள்தந்தை அவர்களின் 116வது ஜெயந்தி விழாவில் பத்மபூஷண் விருதாளர் அருள்நிதி. Dr. SKM. மயிலானந்தன் அவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றதுஇவ்விழாவில் கோவை, பாரதீய வித்யாபவன் தலைவர் . B.K. கிருஷ்ணராஜ் வானவராயர் அவர்கள் சிறப்புரையாற்ற உள்ளார்கள். முன்னாள் CBI இயக்குனர் D.R.கார்த்திகேயன் வாழ்த்துரை வழங்கினார்


இவ்விழாவில் S.V. பாலசுப்ரமணியம் விழாக்குழு தலைவர், தலைவர், அறிவுத் திருக்கோயில், ஆழியாறு, மற்றும் அறங்காவலர்கள். மற்றும் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *