24 காரட் தங்க முலாம் பூசப்பட்ட பிரீமியம் நகைகளுக்கான இந்தியாவின் முன்னணி பிராண்டுகளில் ஒன்றான ‘மந்தாரா’ நிறுவனத்தின் புதிய கிளை, கோவை ஆர்.எஸ்.புரம் திருவேங்கடசாமி சாலையில் வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.

இதுகுறித்து கோவையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், மந்தாரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பினு குமார் பேசினார்.. :

நகைத்துறையில் 26 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறோம். இந்த நீண்ட பயணத்தில் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நேரடியாக புரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக, தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலை காரணமாக, அழகான தங்க நகைகளை வாங்க வேண்டும் என்ற பலரின் கனவு சவாலாக மாறியுள்ளது.

அதே நேரத்தில், குறைந்த விலையில் கிடைக்கும் கவரிங் நகைகளில் தரம் மற்றும் நீடித்த தன்மை தொடர்பாகவும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இந்த இரண்டு விஷயங்களுக்கும் ஒரு சிறந்த தீர்வை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் ‘மந்தாரா’ உருவானது.

925 ஸ்டெர்லிங் வெள்ளியை அடிப்படையாகக் கொண்டு, எங்களது திறமையான கைவினைக் கலைஞர்களால் ஒவ்வொரு நகையும் நுணுக்கமாக வடிவமைக்கப்படுகிறது. அதன் மீது 24 காரட் தங்க முலாம் பூசப்படுகிறது. பாரம்பரிய இந்திய நகைகளின் வடிவமைப்புடன், இன்றைய தலைமுறையினரின் ரசனைக்கு ஏற்ற நவீன வடிவமைப்புகளுக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.

நெக்லஸ்கள், வளையல்கள், மோதிரங்கள், கம்மல்கள், ஜிமிக்கிகள், பிரேஸ்லட்டுகள், திருமண நகைகள், ஃபேஷன் நகைகள் என பல்வேறு வகையான நகைகள் எங்களிடம் உள்ளன. இதுதவிர வெள்ளி நகைகள், முத்துக்களால் உருவாக்கப்பட்ட நவீன நகைகள், பரிசுப் பொருட்கள் மற்றும் பூஜை அறைகளுக்கான தெய்வச் சிலைகள் உள்ளிட்டவையும் வாடிக்கையாளர்களுக்காக வழங்கப்படுகின்றன.

கோவை விமான நிலையத்தில் ஏற்கனவே எங்களது கிளை செயல்பட்டு வருகிறது. தற்போது ஆர்.எஸ்.புரத்தில் புதிய கிளையை தொடங்குகிறோம். கோவை மக்களிடம் இருந்து கிடைத்து வரும் வரவேற்பு எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து 2027-ஆம் ஆண்டில் பல்வேறு முக்கிய இடங்களில் மேலும் பல புதிய கிளைகளை தொடங்க திட்டமிட்டுள்ளோம்.

தரம், கைவினைத்திறன் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற விலை ஆகியவற்றை ஒருங்கிணைத்து, பிரம்மாண்டமான நகைகளை அனைவரும் அணிந்து மகிழும் வகையில் வழங்குவதே எங்களது முக்கிய நோக்கம் என பினு குமார் தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *