உத்தராகண்ட் மாநிலம் ஹல்தவானியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கலந்து கொண்டு பேசிய மேடையில், ‘ஸ்ரீ ராம் சேனா’ அமைப்பினர் சுத்திகரிப்பு யாகம் நடத்திய சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் சுந்தராபுரம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆகஸ்ட் 8ஆம் தேதி ஹல்தவானியில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் மல்லிகார்ஜூன கார்கே உரையாற்றியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 10ஆம் தேதி அவர் பேசிய அதே மேடையில் ‘ஸ்ரீ ராம் சேனா’ அமைப்பினர் சுத்திகரிப்பு யாகம் நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தனக்கு இழைக்கப்பட்ட சாதிய அவமானம் என்றும், தீண்டாமை கொடுமையை எதிர்கொண்டது போன்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளதாகவும் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்திருந்தார்.
இந்த சம்பவத்தை கண்டித்தும், அரசியல் தலைவர்களை சாதி மற்றும் மத அடிப்படையில் அவமதிக்கும் செயல்களை தடுக்க வலியுறுத்தியும் கோவை தெற்கு மாவட்ட காங்கிரசார் சுந்தராபுரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சக்திவேல் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், குறிச்சி சர்க்கிள் தலைவர் முகம்மது இஸ்மாயில் ,கோபாலகிருஷ்ணன், முருகன்,ஹாரூன்,முகம்மது ஹாரீஸ்,குறிச்சி சிவானந்தம், உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில்,முன்னாள் மாவட்ட தலைவர் என்.கே பகவதி.பிசிசி. உறுப்பினர்கள் எஸ் பி கே கணேசன்.என். காளீஸ்வரன்.மாவட்ட பொருளாளர் எஸ் ஸ்ரீதர்.மாவட்ட நிர்வாகிகள் ஜி.மதுசூதனன். கே ஜே.ஏ.ராஜன்.சி மோகன்ராஜ்.வி.சி. முருகன்.பொள்ளாச்சி நகரத் தலைவர் ஏ.செந்தில்குமார் மாவட்ட தலைவர் எ.முகமது ஹாருண்.100வதுவார்டு செயலாளர் எஸ்.சிவானந்தம்.வார்டு தலைவர் கருப்புசாமி. பி.என். லோகநாதன்.சக்திவேல்.வட்டார நகரத் தலைவர்கள் மதுக்கரை பழனிச்சாமி. கிணத்துக்கடவு எம் ஏ சிவராஜ். சாந்தலிங்கம் தமிழ்ச்செல்வன். ஜவகர். கோட்டூர் பூபதி. வால்பாறை அமீர்.மகளிர் காங்கிரஸ் தலைவி மகாலட்சுமி..கலாவதி. வள்ளிநாயகம்.பிரகாஷ்.தங்கவேல். சிரஞ்சீவி கண்ணன் கோவிந்தராஜ்.ஆட்டோ கணேஷ். பாபு. கண்ணன். . இளைஞர் காங்கிரஸ் தலைவர் சேதுபதி. ஓ.பி.சி ரவிக்குமார்.ஜெயக்குமார். உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.