பொள்ளாச்சி, ஆக. 15
ஆனைமலை வி.ஆர்.டி. பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் வால்பாறை எம்.எல்.ஏ. சுதாகர் தேசியக் கொடியை ஏற்றினார்.
பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை வி.ஆர்.டி. பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 80வது சுதந்திர தின விழா பள்ளித்தலைமை ஆசிரியர் மீனலோசனி தலைமையில் நடந்தது. வால்பாறை எம்.எல்.ஏ. குட்டி (எ)ஆ. சுதாகர் தேசியக் கொடியை ஏற்றி, சிறப்புரை ஆற்றினார்.
தொடர்ந்து பள்ளி மாணவர்களின் சிறப்பு உரைகள், கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பள்ளியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும் 10, 12ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு எம்.எல்.ஏ. சுதாகர் பரிசுகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஆனைமலை பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் மாதவி உட்பட பலர் கலந்து கொண்டனர். உதவித்தலைமை ஆசிரியர் விமலா தேவி நன்றி கூறினார்.