கும்பகோணம் டான் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 79-வது சுதந்திர தின விழா நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளித் தாளாளர் ஹெச். அப்துல் ரகுமான் தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் இந்தியாவின் விடுதலைக்கு முன்பும், விடுதலைக்குப் பின்பும் கல்வி நிறுவனங்கள் நாட்டின் ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் முன்னேற்றத்திற்கு ஆற்றிவரும் பங்களிப்பு முக்கியமானது என தெரிவித்தார்.
விழாவில் சுதந்திர தினத்தின் நோக்கம் மற்றும் அதன் மாண்புகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும், நமது பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் மாணவ-மாணவிகளின் நடனம், பேச்சு மற்றும் கவிதை நிகழ்ச்சிகள் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாக்களுக்குரிய அனைத்து மரபுகளும் பின்பற்றப்பட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக
பள்ளி முதல்வர் வரவேற்புரையாற்றினார். இதனையடுத்து தமிழ்த்தாய் வாழ்த்து, மாணவர்களின் நாட்டுப்பண் இடம்பெற்றது.
விழாவில் பெற்றோர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.