திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் வான்புகழ் வள்ளுவர் முத்தமிழ் சங்கத்தின் சார்பில் 80வது சுதந்திர தின விழா ஆவடி மூர்த்தி நகரில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது
இந்த நிகழ்ச்சிக்கு வான்புகழ் வள்ளுவர் முத்தமிழ் சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொறியாளர் பால. இரகுபதி தலைமை தாங்கினார்.
துணைத் தலைவர் சென்னை செந்தில் வரவேற்புரை ஆற்ற அகவை முதிர்ந்த தமிழறிஞரும் கல்வி உளவியல் வழிகாட்டுநருமான அகநம்பி தி பாலசுப்பிரமணியன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்புகள், மற்றும் பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்களையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் துணை செயலாளர் எஸ் முரளி,ஆவடி நூர்ஜகான், போலீஸ் மணி, மகா திருக்குறள் தாத்தா தஞ்சை புருஷோத்தமன், ஆவின் கோபி,மகா மற்றும் பலர் கலந்து கொண்டனர் இறுதியில் சங்க பொருளாளர் சூர்யகலா நன்றியுரை ஆற்றினார்