திண்டுக்கல்: தன்னார்வ நுகர்வோர் உரிமை பாதுகாப்பு நல மையம், திண்டுக்கல் மாவட்ட கிளை சங்கம் சார்பில் சுதந்திர தின விழா திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் சக்திபுரத்தில் நடைபெற்றது.
விழாவில் மாவட்டத் தலைவர் சுகுமாரன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, விழாவில் கலந்து கொண்ட ஏழை, எளிய பொதுமக்களுக்கு கேக், வாழைப்பழம், சால்வை, சாக்லேட் மற்றும் தேசியக்கொடிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவி லூர்து மேரி, பொருளாளர் ரவிவர்மா, சந்தியாகு, மடீஸ்வரன் மற்றும் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பொதுமக்கள் திரளாக பங்கேற்று சுதந்திர தினத்தை சிறப்பாகக் கொண்டாடினர்.