அச்சிறுப்பாக்கம்: செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் என்.கே.வி. மஹாலில் 80-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.
அச்சிறுப்பாக்கம் அரசு பள்ளியில் பயின்று 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு இவ்விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன.
தேசிய சமூக நல அமைப்பின் மனித உரிமைப் பிரிவு, செங்கல்பட்டு மாவட்டக் குழு சார்பில் நடைபெற்ற இவ்விழாவில், அமைப்பின் தேசிய தலைவர் டாக்டர் ஆர். சிவனேசன், மாவட்டத் தலைவர் மு. வேலு, மாவட்ட இணைத் தலைவர் கே. பாலசுப்பிரமணி உள்ளிட்ட மாநில, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் மாணவ, மாணவிகளுக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. மேலும், விழாவில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் செங்கல்பட்டு மாவட்டக் குழு சார்பில் மனமார்ந்த நன்றி தெரிவிக்கப்பட்டது.