முதுகுளத்தூர் செய்தியாளர் ஆர் செந்தில்குமார்
முதுகுளத்தூர், முதுகுளத்தூரில் உள்ள ஸ்ரீ கண்ணா மெட்ரிகுலேஷன் பள்ளியில் 80-ஆம் ஆண்டு சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவையொட்டி பள்ளி சேர்மன் காந்திராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தலைமையாசிரியர் லீமா தலைமையில் நடைபெற்ற விழாவில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
விழாவின் சிறப்பம்சமாக சாரண, சாரணியர் அணியினரின் அணிவகுப்பு நடைபெற்றது. தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவர்களின் தேசப்பற்று மற்றும் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவர்ந்தன.
விழா நிறைவில் மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. சுதந்திர தின விழா பள்ளி வளாகத்தில் மகிழ்ச்சியுடனும், தேசப்பற்று உணர்வுடனும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.