கோவையில் முதன்முறையாக மாவட்ட அளவிலான கேலோ இந்தியா வூசு மகளிர் லீக் போட்டி நடைபெற்றது.அன்னூரில் உள்ள கே.ஜி. மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற போட்டியில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
முன்னதாக போட்டிகளுக்கான துவக்க விழா,தமிழ்நாடு வூசு சங்கத்தின் பொது செயலாளர் ஜான்சன் மாஸ்டர் தலைமையில் நடைபெற்றதுஇதில் கோவை மாவட்ட வூசு சங்க தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கோவை மாவட்ட விளையாட்டு அலுவலர் புவனேஸ்வரி, அன்னூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அப்துல் ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்..
நிகழ்ச்சியில்,கே.ஜி.மெட்ரிக் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் சரவணன்,சார்லஸ் சதீஷ் குமார்,மற்றும் ஆசிரியைகள் சக்தி கலா,சர்வதேச வூசு விராங்கனையின் தாயார் பத்மபிரியா பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்சான்ஷூ, டாவ்லூ என இரு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில், சீனியர், ஜூனியர் மற்றும் சப்-ஜூனியர் வயது பிரிவுகளைச் சேர்ந்த வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.சான்ஷூ பிரிவில் பல்வேறு எடைப் பிரிவுகளிலும், டாவ்லூ பிரிவில் தனிநபர் வூசு கலை நிகழ்வுகளிலும் சர்வதேச வூசு கூட்டமைப்பின் விதிமுறைகளின்படி போட்டிகள் நடத்தப்பட்டன.
மாவட்ட அளவில் சிறப்பாக விளையாடிய வீராங்கனைகள் அடுத்தகட்டமான மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வகையில் தேர்வு செய்யப்பட்டனர் போட்டிகளில் முதல் நான்கு இடங்களைப் பெற்ற வீராங்கனைகளுக்கு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களுடன் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
கோவையில் முதன்முறையாக நடைபெற்ற கேலோ இந்தியா வூசு மகளிர் போட்டி, மாணவிகளிடையே வூசு விளையாட்டின் மீதான ஆர்வத்தை அதிகரிப்பதுடன், திறமையான வீராங்கனைகளை மாநில அளவிலான போட்டிகளுக்கு அழைத்துச் செல்லும் நோக்கத்துடன் நடத்தியுள்ளதாக போட்டி ஏற்ப்பாட்டாளர்கள் தெரிவித்தனர்…