புதுச்சேரி வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்தில் இன்று 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் திரு. பிரபாகர் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் கொம்யூன் பஞ்சாயத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து குழந்தைகளுக்கு இனிப்புகள், பென்சில்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.
மேலும், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டது. சுதந்திர தின விழா சிறப்பாகவும் மகிழ்ச்சியான சூழலிலும் நடைபெற்றது.