தேனி: தேனி அருகே உள்ள பூதிப்புரம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில், நாட்டின் 80-வது சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு பேரூராட்சி மன்றத் தலைவர் கவியரசு பால்பாண்டியன் தலைமை வகித்தார்.

விழாவையொட்டி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள கொடிக்கம்பத்தில் பேரூராட்சி மன்றத் தலைவர் கவியரசு பால்பாண்டியன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜேஷ், அய்யனார் முருகன், தலைமை இளநிலை உதவியாளர் பா.வினோத் உள்ளிட்ட பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள், அலுவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தேநீர் வழங்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *