கல்பாக்கம், நாட்டின் 80-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், புதுப்பட்டினம்–கல்பாக்கம் கிளை மற்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை இணைந்து இரத்த தான முகாமை நடத்தின.
கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இம்முகாமில் பொதுமக்கள் 70 பேர் தன்னார்வத்துடன் கலந்து கொண்டனர். இதில், உடல் தகுதி பெற்ற 43 பேர் இரத்தத்தை தானமாக வழங்கினர்.
முகாமில் பங்கேற்று இரத்த தானம் செய்த தன்னார்வலர்களுக்கு ஏற்பாட்டாளர்கள் நன்றி தெரிவித்தனர்.