கோயமுத்தூர் மலையாள பண்பாட்டு மேடை சார்பாக நடைபெற்ற சமய நல்லிணக்க ஓணம் விழா கொண்டாட்டம்

கேரள முன்னாள் அமைச்சர் ஷைலஜா டீச்சர், பிரபல மலையாள கவிஞர்முருகன் கட்டாகட உள்ளிட்ட பலர் பங்கேற்பு தொழில் நகரமான தமிழக கேரள எல்லை பகுதியான கோவையில் கேரள வாழ் மலையாள மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர்..

இந்நிலையில்,கோவையில் செயல்பட்டு வரும் கோயமுத்தூர் மலையாள பண்பாட்டு மேடை சார்பாக நான்காம் ஆண்டு ஓணம் பண்டிகை கொண்டாட்ட விழா காளப்பட்டி சாலையில் உள்ள சுகுணா ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது..

கோயம்புத்தூர் மலையாள பண்பாட்டு மேடை அமைப்பின் தலைவர் ராமகிருஷ்ணன் மற்றும் பொது செயலாளர் சந்தோஷ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இதில், கேரளா மாநில முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா டீச்சர் கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்தார்..

விழாவில் கவுரவ அழைப்பாளர்களாக பிரபல மலையாள கவிஞர் முருகன் கட்டாகட,முன்னாள் கோவை பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன்,,கோயம்புத்தூர் மலையாளி சமாஜம் தலைவர் ராமச்சந்திரன்,திரைப்பட நடிகர் கேப்டன் மேத்யூஸ்,வேர்ல்டு மலையாளி கவுன்சல் மகளிர் அணி தலைவர் ஜெயந்தி பிரதீப்,கேரள கிளப் மகளிர் பிரிவு செயலாளர் ஆர்யஸ்ரீ பரதன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..

விழாவில் முன்னதாக கேரள மாநிலத்தின் கலாச்சார நடனங்கள்,செண்டை மேளம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் மேடையில் நடைபெற்றன விழாவில் பேசிய கேரள மாநில முன்னால் அமைச்சர் ஷைலஜா டீச்சர் அனைத்து சமூக மக்களும் கொண்டாடும் பண்டிகையாக ஓணம் பண்டிகை இருப்பதாகவும்,ஜாதி,மத,இன வேற்றுமைகளை கடந்து கோவையில் கொண்டாடப்படும் இந்த ஓணம் பண்டிகை விழா மக்களின் ஒற்றுமையை பிரதிபலிப்பதாக தெரிவித்தார்..

தொடர்ந்து ஓணம் பண்டிகையின் முக்கிய நிகழ்வான ஓணம் சத்தியா விருந்து அனைவருக்கும் பரிமாறப்பட்டது விழாவில் 2000 த்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *