பேராவூரணி, அக்.1
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அண்ணா சிலை அருகே தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றியக் குழுக்கள் சார்பில் தோழர் பி.சீனிவாச ராவ் அவர்களின் நினைவு தின தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.

விவசாயத் தொழிலாளர் சங்க பேராவூரணி ஒன்றியச் செயலாளர் எம்.சித்திரவேல் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் சி.பக்கிரிசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் பா.பாலசுந்தரம், விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலக் குழு உறுப்பினர் வி.ராஜமாணிக்கம், சிபிஐ சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளர் வி.தெட்சிணாமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

சிறப்புரையாற்றிய தலைவர்கள், தோழர் பி.சீனிவாச ராவ் அவர்கள் தனது வாழ்நாள் முழுவதையும் நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர்களின் உரிமைக்காகவும், சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்திற்காகவும் அர்ப்பணித்துக் கொண்டவர் என புகழாரம் சூட்டினர். அவர் காட்டிய போராட்டப் பாதையில் விவசாயத் தொழிலாளர்கள் அணிதிரள வேண்டும் என அறைகூவல் விடுத்தனர்.

இக்கூட்டத்தில், முன்னாள் ஒன்றியச் செயலாளர் துரை.பன்னீர்செல்வம், வி.தொ.ச சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளர் பி.கே.சண்முகம், நகரச் செயலாளர் ஆர்.மூர்த்தி, வி.மைக்கேல்ராஜ், பிச்சைமணி, வி.தொ.ச. பேராவூரணி ஒன்றியத் தலைவர் பி.ஏ.கருப்பையா, வி.தொ.ச. மாவட்டக் குழு உறுப்பினர் பி.சேகர், ஜான் பிரிட்டோ, சிவகாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

பேராவூரணி செய்தியாளர் நீலகண்டன் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *