தூத்துக்குடி தெப்பக்குளம் சீரமைப்பு பணிகள் இரவு பகலாக நடைபெறுகிறது விரைவில் மக்களின் பயன்பாட்டிற்கு பழமை மாறாமல் வரும் மேயா் ஜெகன் பொியசாமி தகவல்
தூத்துக்குடி மாநகராட்சியின் மையப் பகுதியில் உள்ள ஆன்மீக பகுதியான பாகம்பிாியாள் உடனுறை சங்கரராமேஸ்வரா், வைகுண்டபதி பெருமாள், மாாியம்மன், முத்தாரம்மன், மேலூா் பத்திரகாளியம்மன் ஆகிய கோவில்கள் அடங்கிய பகுதியில் நூறு ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட தெப்பக்குளம். ஆண்டுதோறும் தை மாதம் தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு பொதுமக்கள் வைத்த கோரிக்கையடுத்து மாநகராட்சி நிர்வாகம் தெப்பக்குளத்தை சீரமைத்தது அப்போது எதிர்பாராத விதமாக தெப்பக்குளம் சிதைந்தது. இதனால் நவீன வசதிகளுடன் பொதுமக்கள் கண்டு கழிக்கும் வகையில் நவீன முறையில் பழமை மாறாமல் தெப்பக்குளம் சீரமைக்கப்படும் என்று மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி பொதுமக்களுக்கு தெரிவித்திருந்தாா்..


இதனையடுத்து 50 லட்சத்திற்கும் மேல் மாநகராட்சி நிதி ஒதுக்கீடு செய்து நவீன வசதிகளுடன் மக்களை கவரும் வகையில் தெப்பக்குளம் உருவாக்கப்பட்டு வருகிறது. தெப்பக்குளத்தில் நடைபெறும் பணிகளை நேரில் சென்று டாா்ச் அடித்து ஆய்வு மேற்கொண்டு அப்போது அந்த நடைபெற்றுக் கொண்டிருக்கும் பணிகளை மேயா் ஜெகன் பொியசாமி முழுமையாக பார்வையிட்டார்.


பின்னா் மேயர் ஜெகன் பொியசாமி கூறுகையில் தெப்பக்குளத்தின் தென்புறம் மின்சார வாரியம் டிரான்ஸ்பார்ம் அமைத்திருந்தது இரண்டு மின் கம்பங்களும் இருந்தது இது பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாகவும் தெப்ப திருவிழாவின் போது பொதுமக்கள் பார்ப்பதற்கு இடையூறாகவும் இருந்தது மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டத்தின் போில் தெப்பக்குளத்தின் தென்புறம் இருந்த டிரான்ஸ்பார்ம் இரண்டு மின் கம்பங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதுபோல தெப்பக்குளம் பழமை மாறாமல் நவீன முறையில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. செயற்கை மூலம் இயற்கையாகவே உருவாக்கப்பட்டது

போல் நீர்வீழ்ச்சி அமைக்கப்பட உள்ளது இரவை பகலாக்கும் வகையில் மின்விளக்குகள் அமைக்கப்பட உள்ளது. பொதுமக்கள் அமரும் வகையில் நவீன இயற்கை வசதிகள் உருவாக்கப்பட உள்ளது. சிறுவர் சிறுமியா்கள் பொழுதுபோக்கு வகையில் சிறிய வகை ஊஞ்சல்கள் சறுக்குகள் அமைக்கப்பட உள்ளது. தெப்பத் திருவிழாவில் மட்டும் பொதுமக்கள் கண்டு களிக்கும் வகையில் வருடம் 365 நாளும் தெப்பத்தை வந்து பொதுமக்கள் பார்வையிடும் வகையில் நவீன வசதிகளுடன் தெப்பக்குளம் இரவு பகலாக சீரமைக்கப்பட்டு வருகிறது இரண்டு மாதங்களில் பணிகள் முடிந்து மக்களின் பயன்பாட்டிற்கு தெப்பக்குளம் வந்துவிடும் என்று கூறினார்.
மாநகராட்சி சுகாதாரக் குழு தலைவர் சுரேஷ்குமார். மின்வாாிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, உள்பட பலா் உடனிருந்தனா்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *