வேப்பூர் அக்-1
கடலூர் மாவட்டம்
வேப்பூர் அருகிலுள்ள ஏ.சித்தூர் கிராமத்தைச் சேர்ந்தவ|ர் முருகேசன் மகன் சீனிவாசன் (வயது37) இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர் குடும்பத்துடன் சென்னை, கிண்டியில் தங்கி, தனியார் ஐ.டி., நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்தார். சில நாட்களுக்கு முன் விடுமுறையில் தனது சொந்த கிராமத்திற்கு வந்தவர் நேற்று இரவு வேப்பூரில் நடந்து கொண்டிருக்கும் தனது புது வீடு கட்டுமானப் பணியை பார்த்து விட்டு தனக்கு சொந்தமான டி.என்., 37 பிஇ 7253 எண்ணுள்ள ராயல் என்பீல்ட் புல்லட்டில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
நேற்று இரவு 9:30 மணியளவில் சேலம்-கடலூர் சாலையில் வேப்பூர் அடுத்த ஏ.சித்தூர் ஆறுமுகம் திருமண மண்டபம் அருகே சென்ற போது, எதிர்பாராத விதமாக காட்டுப்பன்றி குறுக்கே வந்து பைக் மீது மோதியது. அதில் விலாபகுதி, தலை, உயிர் நிலை பகுதிகளில் காயமடைந்தவரை விருத்தாசலம் அரசு மருத்துவ மனையில் சேர்க்கபட்டு மேல். சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த விபத்து குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்