செங்குன்றம் செய்தியாளர்

மாதவரம் – செங்குன்றம் செல்லும் கொல்கத்தா நெடுஞ்சாலையில் இரட்டை ஏரி அருகே நீர்வளத்துறையால் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலா தலமான படகுக்குழாம்
பயனற்ற நிலையில் உள்ளது.

கடந்த தேர்தலுக்கு முன்பு அவசர அவசரமாக ஓரிரு நாட்களுக்கு முன் திமுக எம்எல்ஏவால் திறக்கப்பட்ட இந்தப் படகுக் குழாம் மாதவரம், புழல், கொளத்தூர் ரெட்ஹில்ஸ்னு சுற்றுவட்டாரத்துல வசிப்பவர்களுக்கு கூட இந்த இடம் தெரியாதாம் , புதிய அரசு தற்போது பதவியேற்று செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற வேளையில்,
இந்தப் படகுகுழாம் உபயோகமற்று கிடப்பதால் மக்களின் வரிப்பணம் வீணாகிறது.

இரட்டை ஏரியை சுற்றி கழிவு நீரை சூழ்ந்து பல ஏக்கர் கணக்கில் ஆகாயத்தாமரைகள்
படர்ந்து, படகுகளையும் சூழ்ந்து படகுகளை ஆடாமல், அசையாமல் பாதுகாத்துக் கொண்டிருக்கின்ற இந்த ஆகாயத்தாமரைகளை அகற்றாமலும், 43 கோடியில் இரட்டை ஏரியை சீரமைத்து சுற்றுலாத்தலம், படகு குழாம், பூங்காக்கள் பறவைகள் சரணாலயம் என வர்ணித்து திட்டம் எதையுமே செயல்படுத்தாமல், கிடப்பில் போட்ட நீர்வளத்துறை தற்போது
அவசரமாக செயல்படுத்தப்பட்ட படகு போக்குவரத்தும் இல்லாமல், காம்பௌண்ட் சுவர் கட்டி விட்டு உபயோகம் இல்லாமல் பராமரிப்பின்றி காட்சியளிக்கிறது.

மேலும் இந்த இடத்தில், நெடுஞ்சாலை துறையினரால் பராமரிக்கப்படும் சாலை விளக்குகள் இல்லாததால், இருள் சூழ்ந்த இடத்தில் சமூக விரோத செயல்கள் நடப்பதால் பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்வோர் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். சட்டமன்ற உறுப்பினரும் இது பற்றி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அதிக நீர்வளத் துறை அதிகாரிகளிடம் முறையிடாமலும், மக்களின் வரிப்பணத்தை வீணாக்க மாட்டோம் என சபதம் மேற்கொண்ட முதலமைச்சரின் நடவடிக்கை நீர்வளத்துறை மேல் பாயுமா என்பது சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *