துறையூர் ஆக-18
திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சிக்குட்பட்ட 18 வது வார்டில் உள்ள பாரதி நகர் மற்றும் பாரதி நகர் எக்ஸ்டென்ஷன் ஆகிய பகுதிகளில் பல மாதங்களாக குடிநீர் வராததால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருவதாக துறையூர் நகராட்சி ஆணையர் கண்ணனிடம் மனு அளித்துள்ளனர்.துறையூர் நகராட்சிக்குட்பட்ட 18 வது வார்டில் உள்ள பாரதி நகர் மற்றும் பாரதி நகர் எக்ஸ்டென்ஷன் ஆகிய பகுதிகளில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் பல மாதங்களாக குடிநீர் வராததால் குழந்தைகள், பள்ளி மாணவர்கள், முதியோர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக அப்பகுதி குடியிருப்பு வாசிகள் அவதிபட்டு வருவதாகவும், இது சம்பந்தமாக 18வது வார்டு நகர் மன்ற உறுப்பினரான நகரமன்ற தலைவர் செல்வராணியிடம் பலமுறை முறையிட்டும் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் வெகுண்டெழுந்த அப்பகுதி குடியிருப்பு வாசிகள் துறையூர் நகராட்சி அலுவலகத்தில் ஆணையர் கண்ணனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.மனுவை பெற்றுக்கொண்ட ஆணையர் நேரில் வந்து பார்வையிட்டு ஓரிரு நாட்களில் தீர்வு காணப்படும் என தெரிவித்துள்ளார்.
அப்போது பேசிய அப்பகுதி பொதுமக்கள் குடிநீருக்காக பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால் இப்பொழுது ஆணையரிடம் மனு கொடுத்துள்ளோம். அவரும் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளனர். இதில் பாரதி நகரை சேர்ந்த செந்தில் ராஜா, சஞ்சீவி ,திவ்யப்ரியா, பச்சமுத்து,மோகன்தாஸ், மனோகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்