நீலகிரி மாவட்டத் தலைமை தூய்மை மற்றும் பசுமை விடியல் நட்பணி மன்றம் சார்பாக, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று 200-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மதிப்பிற்குரிய வனவர் திரு. குமார் அவர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு நிகழ்வை சிறப்பித்தார்.மேலும், நீலகிரி மாவட்ட சமூக தன்னார்வலர் கூட்டமைப்பு சார்பாக திரு. ரமணா சுரேஷ் மற்றும் திரு. ஜாப்பர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்வில் நீலகிரி மாவட்டத் தலைமை தூய்மை மற்றும் பசுமை விடியல் நட்பணி மன்றத்தின் தலைவர் திரு. சதீஸ்குமார் அவர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்றார்.விடியல் நட்பணி மன்றத்தின் துணைத் தலைவர் திரு. ராஜா அவர்கள் சிறப்புரையாற்றினார்.
மேலும், விடியல் நட்பணி மன்றத்தின் ஆலோசகர் திரு. வேணுகோபால் அவர்கள் நிகழ்வில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் மற்றும் சிறப்பாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.
தொடர்ந்து, விடியல் நட்பணி மன்றத்தின் பொறுப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.இந்நிகழ்வில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். குறிப்பாக பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டு, சுற்றுச்சூழலை பாதுகாப்போம் – மரங்களை வளர்ப்போம் என்ற உறுதிமொழியை ஏற்று, அதனை கடைப்பிடிப்பதற்கான உறுதியையும் எடுத்துக்கொண்டனர்.